பூஜ்யஸ்ரீ ஆசார்ய சுவாமிகளின் பீடரோகன ஜெயந்தி மஹோத்சவம் - 22 மார்ச் 2013 - காஞ்சிபுரம்
பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளின் பீடரோகன ஜெயந்தி மஹோத்சவம் 23 மார்ச் 2013 அன்று காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்டது. மஹோத்சவம் அதிகாலை கணபதி ஹோமமுடன் துவங்கியது. பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளும் சர்வதீர்த்த கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாத திருகோயிலுக்கு வருகை தந்தார்கள். திருகோயில் மரியாதையுடன் அங்கிருந்து பக்தர்கள் சூழ ஊர்வலமாக ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீமடத்தை வந்தடைந்தார்கள். ஊர்வலத்தில் மங்கள இசை வாத்தியம், வேத பண்டிதர்களின் வேத மந்திரம், பெண்களின் சௌந்தர்ய லஹரி பாராயணம், பக்தர்களின் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய கோயில்களிலிருந்து பஜன கோஷ்டிகள் உட்பட அனைவரும் பங்கு கொண்டார்கள். சங்கரா பள்ளிகளிலிருந்தும் சங்கரா கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். ஜன கல்யாண் உறுப்பினர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளால் வழிநடத்தப்பட்ட இந்த ஊர்வலம் நான்கு ராஜ வீதி வழியாக சென்று ஸ்ரீமடத்தை அடைந்தார்கள்.
ஸ்ரீ ஆசார்ய சுவாமிகளுக்கு பல்வேறு கோயில்களின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளுக்கு புஷ்பாபிஷேகம் செய்தார்கள். பல்வேறு இடங்களிலிருந்து மஹோத்சவத்தில் பங்கு கொண்ட பக்தர்கள் ஸ்ரீ ஆசார்ய சுவாமிகளின் அருளை பெற்றார்கள். அன்றைய மாலை நேரத்தில் ஸ்ரீ உன்னிகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ டெல்லி சுந்தர்ராஜன் வயலின் இசையுடன், ஸ்ரீ திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்க இசையுடன், ஸ்ரீ மாஸ்டர் G.S சுந்தரம் மிருதங்க இசையுடன் மற்றும் ஸ்ரீ E.M சுப்ரமணியம் கடம் இசையுடன் கர்நாடக இசை கச்சேரி பிருந்தாவனத்தில் நடைபெற்றது.
In English - Peetarohana Jayanthi Mahotsavam held at Kanchi- 22 March 2013